ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
மலையாள திரையுலகில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை அளித்தது. இதனையடுத்து மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி பார்வதி, ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட பல நடிகைகள் ஒன்று சேர்ந்து சினிமா பெண்கள் நல அமைப்பு (WCC) ஒன்றைத் துவங்கினார்கள். இதன் மூலம் அவ்வப்போது சினிமாவில் பாதிக்கப்படும் பெண்களுக்காக குரல் கொடுத்து வந்தார்கள். இவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தான் கேரள அரசு நீதிபதி ஹேமா கமிஷன் தலைமையிலான குழுவை அமைத்து அறிக்கை தயாரிக்க செய்தது.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வு ஒன்றில் நடிகை பார்வதி கலந்து கொண்டார். அதே நிகழ்வில் டப்பிங் கலைஞரும் குணச்சித்திர நடிகையுமான பாக்கியலட்சுமியும் கலந்து கொண்டார். இவரும் சினிமாவில் இருக்கும் பெண்களுக்காக குரல் கொடுத்து வருபவர் தான். இந்த நிகழ்வில் பாக்யலட்சுமி பேசும்போது, “சினிமா பெண்கள் நல அமைப்பு இன்னும் வலுவாக பெண்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இன்னும் ஆக்டிவாக செயல்பட வேண்டும். பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பு தர முன்வர வேண்டும்” என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய பார்வதி, “இவ்வளவு பேசுகின்ற பாக்யலட்சுமி ஏன் சினிமா பெண்கள் நல அமைப்பில் சேர்ந்து பெண்களுக்காக போராடக்கூடாது ? அவரை யார் தடுத்தது? நாங்கள் பலமுறை அவரை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் தான் வர மறுத்துவிட்டார்” என்று கூற, அரங்கில் இருந்தவர்கள் பார்வதியின் இந்த பதிலுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதனால் அதிர்ச்சியான பாக்யலட்சுமி, “நான் பெண்கள் பாதுகாப்பு விஷயம் குறித்து அமைச்சரிடம் பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதன் பிறகு ஒரு தொலைக்காட்சியில் பார்த்தபோது தான் இவர்கள் (WCC) அமைச்சரிடம் பேசி விட்டார்கள் என தெரிய வந்தது. நான் என்னை ஏன் அழைக்கவில்லை, உங்கள் வட்டத்தில் இருக்கும் சிலரை மட்டும் அழைத்துக் கொண்டீர்கள் என கேட்டதற்கு உங்களை இதில் இழுப்பதற்கு விருப்பமில்லை என்று பதில் கூறினார்கள். என்னை நீங்கள் விரும்பவில்லை என்றால் தாராளமாக என்னை வெளியேவே நிற்க வைத்து விடலாம்” என்று கூறினார்.
சினிமாவில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் இருவரும் எதிரெதிராக பேசிக் கொண்டது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.