குஷி படத்திற்கு பிறகு வெப் சீரியல்களில் நடித்து வரும் சமந்தா, சமீபகாலமாக ஆன்மிகத்திலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அதோடு வெளிநாடுகளுக்கு அடிக்கடி டூர் சென்றும் வருகிறார். அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக கடந்த டிசம்பர் இறுதியில் அவர் அமெரிக்கா சென்றிருந்தார். அதையடுத்து அமெரிக்காவில் இருந்து தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை இணைய பக்கத்தில் பதிவேற்றி வந்தார் சமந்தா. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்தியா திரும்பிய சமந்தா, சென்னையில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது மும்பையில் நடைபெறும் புதிய வெப் சீரிஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.