என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் 1200 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் வேலைகளை படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டாராம்.
ஜுன் மாதம் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தயாரிப்பாளர் அஷ்வினி தத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதற்காக பிரபாஸ் ஏற்கெனவே தேதிகளைக் கொடுத்துவிட்டாராம். அமிதாப், கமல் உள்ளிட்டவர்களிடமும் தேதிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டுதான் வெளியிட உள்ளார்களாம். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் விஎப்எக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் அதை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதே அதற்குக் காரணம்.