ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் படம் 'குடும்பஸ்தன்'. வரும் ஜன.,24ல் வெளியாக உள்ள இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். கலகலப்பான இப்படத்தின் டிரைலர் நேற்று (ஜன.,18) வெளியானது. இதற்கான விழாவில் பங்கேற்ற இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி, ‛‛என்னுடைய கனவை அடைய ஆதரவு கொடுத்த என் குடும்பத்திற்கு நன்றி. தொழில்நுட்பக் குழுவினர் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். படத்தில் நடித்த முத்தமிழ், நிவி, ஜென்சன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். ஜென்சன் தமிழ் சினிமாவின் அடுத்த நாகேஷ். எழுத்தாளர் பிரசன்னா எனக்கு பல விஷயங்களில் வழிகாட்டியுள்ளார். அவருக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது'' என்றார்.
நடிகர் மணிகண்டன் கூறுகையில், ‛‛இரண்டரை வருஷத்திற்கு முன்பு ராஜேஷை இந்தக் கதைக்காக சந்தித்தேன். 'குட்நைட்', 'லவ்வர்' படம் ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் இந்தப் படத்தில் நான் நடித்தாக வேண்டும் என காத்திருந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இயக்குநர் ராஜேஷ் ஒரு அட்வென்ச்சர் கதை எழுததான் நினைத்தார். பிறகு இன்றைய தேதியில் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் என்பதால் அதையே படமாக்கியிருக்கிறார். பார்வையாளர்களுக்கும் பல வழியில் இது கனெக்ட் ஆகும். குரு சோமசுந்தரத்தின் 'பாட்டல் ராதா' படமும் 'குடும்பஸ்தன்' படத்தோடு வருகிறது. நான் ஒரு படம் பார்த்து எமோஷனல் ஆகி அழுவது அரிது. அது 'பாட்டல் ராதா' படத்தில் நடந்திருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். 'குடும்பஸ்தன்' படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
என் வாழ்க்கையில் அதிக சண்டை போட்ட நபர்களில் இயக்குநர் ராஜேஷூம் ஒருவர். அது எல்லாம் படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காகதான். அதை சரியான விதத்திலும் அவர் புரிந்து கொண்டார். சினிமாவில் சின்ன பெயர் எடுக்கவே பெரிய உழைப்பு தேவையாய் இருக்கிறது. நான் செய்த சின்ன வேலைகளுக்கு எல்லாம் பெரிய பாராட்டு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படமும் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
நடிகை ஷான்வி, “படக்குழுவினர் எல்லோரும் எனக்கு நல்ல சப்போர்ட் செய்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. நம்ம எல்லோர் வீட்டிலும் நடக்கும் கதைதான் இது. டிரைலர் எப்படி சிரித்து ரசித்தீர்களோ அதேபோலதான் படமும் இருக்கும்” என்றார்.