நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' |
தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்த படங்களில் சூப்பர் ஹிட்டான ஒரு படம் 'லக்கி பாஸ்கர்'. துல்கர் சல்மான் நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. அதற்கு முன்பு தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது 'வாத்தி' கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாம். படத்திற்கு 'ஹானஸ்ட் ராஜ்' என்ற பெயரைக் கூடத் தேர்வு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் தற்போது 'குபேரா, இட்லி கடை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்க உள்ள படத்திலும் நடிக்கப் போகிறார். 'குபேரா' படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 'இட்லி கடை' படப்பிடிப்பு முடியப் போகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் பூஜை ஏற்கெனவே போடப்பட்டுவிட்டது. அடுத்து அப்படத்தில் தனுஷ் நடிக்க ஆரம்பிக்கலாம்.
அதற்கடுத்து 'ஹானஸ்ட் ராஜ்' படத்தில்தான் நடிப்பார் என்று தெரிகிறது. 'வாத்தி' படம் போலவே இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகப் போகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
இந்தப் படங்கள் தவிர, 'போர் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்க உள்ள ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்க உள்ள படம், 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள படம், ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ள படம் ஆகியவற்றிலும் தனுஷ் அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.