ஜனவரி 24ல் 6 படங்கள் ரிலீஸ் | தல வந்தால் தள்ளி தான் போகனும் - டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விஜய் கதையில் விஷால்? | தண்டேல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் பிரபல நிறுவனம்! | ராம் - மிர்ச்சி சிவா படத்தின் தலைப்பு இதுவா? | மார்ச் மாதத்தை குறிவைக்கும் ஜீனி படக்குழு! | குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் தான்: ‛குடும்பஸ்தன்' டிரைலர் விழாவில் மணிகண்டன் பேச்சு | 'வாத்தி' இயக்குனருடன் மீண்டும் கைகோர்ப்பு: அடுத்தடுத்து படங்களை குவிக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: நிறங்கள் மாறி வெளிவந்த “நிறம் மாறாத பூக்கள்” | அல்லு அர்ஜுனை நெருங்க முடியாத 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் |
'இயக்குநர் இமயம்' என அறியப்படும் இயக்குநர் பாரதிராஜா, ஒரு சுகாதார ஆய்வாளராக தன் முதல் பணியை ஆரம்பித்து, பின் சினிமா மீது கொண்ட தீரா காதலால் சென்னைக்குப் பயணப்பட்டு, எண்ணற்ற இடர்பாடுகளுக்குப் பின் இயக்குநர் பி புல்லையாவிடம் உதவியாளராக இருந்து, அதன்பின் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் இணைந்து சினிமா நுணுக்கங்களை நன்கறிந்து, இந்த சினிமா உலகை ஆள நினைத்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு கிடைத்த முதல் பட வாய்ப்புதான் “16 வயதினிலே”. இவரது வருகைக்கு முன்பு வரை ஸ்டூடியோக்களில் அடைப்பட்டுக் கிடந்த தமிழ் சினிமா, இவரது வருகைக்குப் பின் அதிலிருந்து விடைபெற்று, தமிழகத்திலுள்ள கிராமங்களையே தங்களது ஸ்டூடியோக்களாக மாற்றியமைக்கத் தொடங்கியது.
முதல் படத்திலேயே தன்னுடைய ஆளுமையை நிரூபித்த இயக்குநர் பாரதிராஜா, தனது அடுத்த படமான “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தையும் கிராமத்து பின்புலத்திலேயே எடுத்து வெற்றி கண்டிருந்தாலும், கிராமத்து கதைக்களத்தைக் கொண்ட திரைப்படங்களை மட்டுமே இவரால் இயக்க முடியும் என்ற விமர்சனங்களுக்கும் அன்று இவர் உட்படாமல் இல்லை. அடுத்து வந்த தனது மூன்றாவது படைப்பான “சிகப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டதன் மூலமாகத்தான் அதற்கு முற்றுப் புள்ளி வைத்து “இயக்குநர் இமயம்” ஆனார். அவ்வாறு நகரத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட இவரது மற்றொரு படைப்புதான் “நிறம் மாறாத பூக்கள்”.
சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தாங்கள் எடுக்க நினைக்கும் திரைப்படத்திற்கு நாயகன், நாயகி இவர்களாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்து, அதற்கான பணிகளை ஆரம்பிக்கும் போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர்கள் மனதில் நினைத்திருந்த அந்த நடிகர் மற்றும் நடிகையர் அத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய், பின் வேறு நடிகர்களை நடிக்க வைத்தோ அல்லது புது முகங்களை நடிக்க வைத்தோ படத்தை எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்களும் உண்டு. தயாரிப்பாளர்களும் உண்டு. அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா இயக்கி வெற்றி பெற்ற திரைப்படமான இந்த “நிறம் மாறாத பூக்கள்” திரைப்படத்திற்கு நாயகன் நாயகியராக பாரதிராஜாவின் முதல் தேர்வாக இருந்தது நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஸ்ரீதேவி.
நடிகர் விஜயன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் சுதாகர் கதாபாத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசனும், நடிகை ரத்தி அக்னிஹோத்ரி ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ரீதேவியும் என முடிவு செய்து, பெரிய பட்ஜெட் படமாக எடுக்க நினைக்க, பின் தவிர்க்க முடியாத காரணங்களால் அன்று வளர்ந்து வரும் நாயகன் நாயகியாக இருந்த சுதாகர், ராதிகா, விஜயன், ரத்தி அக்னிஹோத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்திருந்தனர். நடிகர் விஜயனுக்கு பின்னணி குரல் கொடுக்க அன்று வெறும் ரவியாக இருந்த 'நிழல்கள்' ரவியை தேர்வு செய்து பின் அவரும் நிராகரிக்கப்பட்டு, இயக்குநர் பாரதிராஜாவே நடிகர் விஜயனுக்காக பின்னணி குரலும் கொடுத்திருந்தார். சிறிய பட்ஜெட் படமாக எடுத்து, அதையும் மாபெரும் வெற்றிப் படமாக்கித் தந்திருந்தார் இயக்குநர் பாரதிராஜா.