தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகரான நாக சைதன்யா சமீபத்தில் நடிகை ஷோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமண கொண்டாட்டம், தேன்நிலவு என கிட்டத்தட்ட உற்சாகமாக ஒரு மாதத்திற்கு மேல் செலவிட்ட நாக சைதன்யா தெலுங்கில் தற்போது தான் நடித்து வரும் தண்டேல் படத்தின் படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பி உள்ளார். சந்து மொண்டேட்டி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். மீனவ சமுதாயத்தை மையப்படுத்தி கடலோர பகுதிகளில் நிகழும் கதையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற கிராமத்து பகுதியில் நாக சைதன்யா அந்தப் பகுதியில் உள்ள சில மீனவர்களுடன் சேர்ந்து அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்து பின்பு தானே அவற்றை படப்பிடிப்பு தளத்தில் சுவையாக மீன் கறி சமைத்து படக்குழுவினருக்கும் அந்த பகுதி மக்களுக்கும் தன் கையால் விருந்து பரிமாறி உள்ளார். பிறகு தானும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார். தனது திருமணத்திற்காக நாக சைதன்யாவே தங்களுக்கு வைத்த விருந்து இது என்று தண்டேல் படக்குழுவினர் சிலாகித்து வருகிறார்கள். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.