பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது.
படத்திற்குத் சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 186 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவ்வளவு தொகையை முதல் நாளில் வசூலித்ததா என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்களே கேள்வியை எழுப்பியுள்ளன.
சமீபகாலங்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முதல் நாள் வசூல் என நிறைய சொல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சில இணையதளங்களில் முதல் நாள் வசூலாக மொத்தமாக 60 கோடிதான் வசூலித்திருக்கும் என்று செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். எதற்காக இவ்வளவு வித்தியாசம் கொண்ட தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள்.