நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை |

துணை நடிகராக பல படங்களில் நடித்த சுகுமார் 'காதல்' படத்தில் நாயகன் பரத்திற்கு நண்பராக நடித்ததன் மூலம் புகழ்பெற்று 'காதல் சுகுமார்' ஆனார். கலகலப்பு, பொன்னான நேரம், விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருட்டு விசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார். தற்போது 'முருகப்பா' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுகுமார் மீது, துணை நடிகை ஒருவர் வடபழனி போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் “நான் துணை நடிகையாக இருக்கிறேன். கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறேன். சினிமாவில் நடிக்கும்போது எனக்கு அறிமுகமான காதல் சுகுமார் என்னோடு நெருக்கமாக பழகினார். பின்னர் காதலித்தார். திருமணம் செய்வதாக கூறி என்னோடு குடும்பம் நடத்தினார். அவ்வப்போது என்னிடமிருந்து பணம், நகைகளை வாங்கினார்.
கடந்த 3 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது என்று கூறி திருமணத்திற்கு மறுத்து வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பணம், நகைளை திருப்ப பெற்றுத் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.