வெற்றியின் ரகசியத்தை சொன்ன நயன்தாரா | பாடகர் அறிவு திருமணம் : இளையராஜா வாழ்த்து | 'வின்டேஜ் ஷங்கர்' எனப் புகழும் கார்த்திக் சுப்பராஜ் | பரபரப்பில்லாமல் போன பொங்கல் வெளியீடுகள் | ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரியை போடுங்க : வடிவேலு | பாலிவுட்டின் மகா ஆரோக்கிய கேம்ப் அறிமுக விழாவில் விந்து தாரா சிங், பூனம் தில்லான் | வெள்ளிக்கிழமை பட ரிலீஸிற்கு கோர்ட் முன் காத்திருக்கும் திரைப்பட துறையினர் | 'கேம் சேஞ்ஜர்' முதல் நாள் வசூல் 186 கோடி | அஞ்சலிக்கு இந்த வருடம் இரட்டைப் பொங்கல் | மார்ச் 1ல் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா : கிஷோர் தூதராக நியமனம் |
புராணங்களையும், அதன் கிளை கதைகளையும் அக்குவேறு ஆணிவேராக பிரித்து அந்தக் காலதக்தில் நிறைய படங்கள் வந்தன. அவற்றில் 90 சதவிகித படங்கள் காலத்தால் அழிந்து விட்டது. அப்படி அழிந்து போன படங்களில் முக்கியமானது 'கங்காவதார்'. புராண மாந்தர்களை பற்றி பேசிக் கொண்டிருந்த காலத்தில் கங்கை நதியை பற்றி பேசியது இந்தப் படம்.
புராணங்கள் மற்றும் செவி வழி கதைகளின் அடிப்படையில் கங்கை நதி எப்படி பூமிக்கு வந்தது. அது பெண்ணாக, பின்னர் கொடூர துர்தேவதையாக மாறி கடைசியாக சிவனின் தலையில் எப்படி அவரது துணைவியாக மாறியது என்பது விளக்கமாக சொன்ன படம்.
அன்றைக்கு பிரபலமாக இருந்த என்.சி.வசந்தகோகிலம் கங்கையாக நடித்தார். கங்கை பூமிக்கு வர காரணமாக இருந்த அயோத்தி மன்னன் பகீரதனாக நாகர்கோவில் கே.மகாதேவன் நடித்தார். டி.எஸ்.தமயந்தி பார்வதியாக நடித்தார். எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகி தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வரும் காந்தர்வ கன்னியாக நடித்தார். சி.வி.பந்துலு சிவனாக நடித்தார்.
இவர்கள் தவிர ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். காளி என் ரத்தனம் தலைமையிலான காமெடி நடிகர்கள் தனி டிராக்காக காமெடி காட்சிகளில் நடித்தனர். முழு படமும் அடையார் சுந்தரம் ஸ்டூடியோவில் படமானது. இந்த ஸ்டூடியோதான் பிற்காலத்தில் எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோ ஆனது.