பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் கமலா காமேஷ், 72. இன்று(ஜன., 11) காலை முதலே இவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. ஆனால் அது உண்மையல்ல.
இதுபற்றி கமலா காமேஷின் மகளும், நடிகையுமான உமா ரியாஸை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛என் அம்மா பற்றி வெளியான செய்தி தவறானது. என் அம்மா கமலா காமேஷ் நலமாக உள்ளார். இறந்தது என் மாமியார் ரஷீதா பானு, 72. வயதுமூப்பு மற்றும் உடல்நல பிரச்னையால் சென்னையில் இறந்துவிட்டார்'' என்றார்.
உமா ரியாஸ், நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்தார். ரியாஸின் அம்மா ரஷீதா தான் இறந்துவிட்டார். ஆனால் உமா ரியாஸின் அம்மா கமலா இறந்துவிட்டது போன்று தவறாக செய்தி பரவிவிட்டது.