சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

நயன்தாராவின் திருமண வீடியோ கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வீடியோவில் தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் 10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாரா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன், வீடியோவை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதன்படி, இன்று (ஜன.,8) இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், அன்றைய தினத்திற்கு அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் என்றும் கூறி ஒத்திவைத்தார்.