2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படம் நாளை மறுநாள் ஜனவரி 10ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்னும் ஆரம்பமாகவில்லை. 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒரு மரணமடைந்தார். அதையடுத்து தெலங்கானாவில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதியில்லை, டிக்கெட் கட்டண உயர்வு இல்லை என அம்மாநில அரசு அறிவித்தது.
இதனால், 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு தெலுங்கானா மாநிலத்தில் இன்னும் சிறப்புக் காட்சி, கட்டண உயர்வுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், ஆந்திர மாநிலம் மட்டும் அவற்றை அறிவித்துள்ளது.
தெலுங்கானா அரசிடம் எப்படியாவது அனுமதி பெற வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முயற்சித்து வருகிறாராம். அதனால்தான், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இன்னும் முன்பதிவு ஆரம்பிப்பதை தள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறாராம்.
மற்ற மாநிலங்களில் 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கான முன்பதிவு சரிவர இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத், ராஜமுந்திரி, மும்பை ஆகிய இடங்களில் மட்டுமே இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எந்த வித நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அதனால், பான் இந்தியா வெளிச்சம் இப்படத்திற்குக் குறைவாகவே இருக்கிறது.