தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' |

ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'கிங்ஸ்டன்'. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் உடன் திவ்ய பாரதி, 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபு மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இது ஜி.வி.பிரகாஷின் 25வது படம் என்பதால் 'பேரரல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகவும் படத்தில் இணைந்துள்ளார். கடல் அட்வென்ஜர் ஜார்னரில் உருவாகும் இந்த படம் ஜி.வி.பிரகாசின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம். பெரும்பகுதி படத்தின் கதை நடுக்கடலில் நடப்பதாக உருவாகி வருகிறது. வருகிற 9ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகிறது.