கிஸ் படத்தின் முதல் பார்வை வெளியானது : பிப்., 14ல் டீசர் | மீண்டும் இணையும் மம்முட்டி - நயன்தாரா கூட்டணி | ரூ.100 கோடி வசூலை கடந்த அஜித்தின் ‛விடாமுயற்சி' | மார்கோ படத்தை ஆக்சன் படம் என விளம்பர படுத்தியது குறித்து பகிர்ந்த உன்னி முகுந்தன்! | ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | அல்லு அர்ஜுனை இயக்கப் போகிறாரா அட்லி? | சீனியர் நடிகர்களின் படங்களால் காஜல் அகர்வாலுக்கு பாதிப்பு | நடிகை பார்வதி நாயருக்கு ‛டும் டும் டும்': சென்னை தொழிலதிபரை மணந்தார் | சாவா படத்திற்கு முன்பதிவு சிறப்பு | ஓராண்டுக்கு பிறகு ஓடிடியில் வரப்போகும் ரஜினியின் லால் சலாம் |
ஹனிப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் 'மார்க்கோ'. இப்படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. மலையாளத் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த 'ஏ' சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
தற்போது படம் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வட இந்திய மாநிலங்கள், தெலுங்கு மாநிலங்களிலும் இப்படம் வெளியாகி குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 9வது படமாக இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது. 'மஞ்சும்மேல் பாய்ஸ்' அதிகபட்சமாக 240 கோடியை வசூலித்துள்ளது. “2018, தி கோட் லைப், ஆவேஷம், புலி முருகன், பிரேமலு, லூசிபர், ஏஆர்எம்' ஆகிய படங்கள் இதற்கு முன்பு 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ், தி கோட் லைப், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம், மார்க்கோ' ஆகிய ஆறு படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வேறு எந்து ஆண்டிலும் இத்தனை படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை.