நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! |
எம்ஜிஆர் நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து, சிறு சிறு வேடங்களில் நடித்து, படிப்படியாக கதை நாயகனாக உயர்ந்த அதே காலகட்டத்தில் எம்ஜிஆர் போன்றே நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர் டி.ஆர்.ராமசந்திரன். எம்ஜிஆர் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார், என்.டி.ராமச்சந்திரன் காமெடி ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார்.
'மந்திரி குமாரி' எம்ஜிஆருக்கு ஒரு திருப்பம் தந்தது, அதே காலகட்டத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு 'சபாபதி' பெரிய திருப்பம் தந்தது. இருவருமே வேகமாக வளர்ந்த காலத்தில் பெயர் குழப்பம் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் அப்போது ராமசந்திரா, ராமச்சந்திரன் என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தார். டைட்டில்களும் அப்படியே இடம் பெற்றது. இதனால் இந்த பெயர் குழப்பத்தை தடுக்க ராமச்சந்திரா என்கிற தனது பெயரை எம்.ஜி.ராமச்சந்திரன் என்று மாற்றினார். டைட்டிலிலும் அப்படியே குறிப்பிட வைத்தார். அதுதான் பிற்காலத்தில 'எம்ஜிஆர்' என்ற மூன்றெழுத்து மந்திர சொல்லாக மாறியது.