மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை |

1960 மற்றும் 70களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் டி.என்.பாலு. அஞ்சல் பெட்டி 520, மனசாட்சி, மீண்டும் வாழ்வேன், நல்லதுக்கு காலமில்லை, ஓடி விளையாடு தாத்தா, சட்டம் என் கையில் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். கமல்ஹாசனின் நெருக்கமான நண்பர். டி.என்.பாலுவுக்கு சில பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட அவருக்கு உதவுவதற்காக கமல் நடித்து கொடுத்த படம் 'சங்கர்லால்'.
இந்த படத்தை டி.என்.பாலு இயக்கினார், ஸ்ரீதேவி, சீமா, பி.ஆர்.வரலட்சுமி, மனோகர், அசோகன், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்தனர். கங்கை அமரன் இசை அமைத்தார், என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்தார்.
கமல்ஹாசன் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். செய்யாத குற்றத்துக்காக ஜெயிலுக்கு போகும் சங்கர்லால் சிறையிலிருந்து விடுதலையானதும் சிதறிய தனது குடும்பத்தை ஒன்று சேர்ப்பதும், தன்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களை பழிவாங்குவதும்தான் கதை.
இந்தபடத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே இயக்குனர் டி.என்.பாலு மரணமடைந்து விட்டார். அதனால் மீதி படத்தை கமல்ஹாசனும், ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதனும் இணைந்து இயக்கி முடித்தனர். இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீப்ரியா நடிப்பதாக இருந்தது. ஆனால் கமல் ஸ்ரீதேவிதான் நடிக்க வேண்டும் என்று பலமாக சிபாரிசு செய்ய ஸ்ரீதேவி நடித்தார். ஸ்ரீதேவி துப்பறிவாளராகவும், சீமா கிளப் டான்சராகவும் நடித்தனர். 'இளங்கிளியே இன்னும் விளங்கலியே...' என்ற ஒரு பாடலுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது.