'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' | பிளாஷ்பேக் : ஒலிம்பிக்கில் ஒலித்த இளையராஜா பாடல் |
2024ல் தமிழ் சினிமாவுக்கு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. முன்னணி நடிகர்களின் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசூலைப் பெறவில்லை. இந்த ஆண்டில் ஒரு படம் கூட 500 கோடி வசூலைக் கடக்கவில்லை.
2023ல் 240 படங்கள் வெளிவந்தன. 2024ல் அதைவிட குறைவாக 230 படங்கள் தான் வெளிவந்துள்ளன. அவற்றில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் பதினைந்து, இருபது தான் தேறும். கடந்த சில ஆண்டுகளாகவே வெற்றி நிலவரம் இப்படித்தான் இருக்கிறது.
தமிழில் இந்தாண்டு வெளியான படங்களில் விஜய்யின் ‛தி கோட்' படம் அதிகபட்சமாக ரூ.455 கோடி வசூலித்தது.
சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து இந்தாண்டில் தமிழில் அதிக லாபத்தை கொடுத்த படங்களில் முதலிடம் பிடித்தது.
ரஜினியின் 'வேட்டையன்', கமலின் இந்தியன் 2' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக ஏமாற்றத்தை தந்தன.
விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் 180 கோடியும், சுந்தர்.சியின் அரண்மனை 4 படம் ரூ.100 கோடி வசூலையும் கடந்தன. இந்த படங்கள் விஜய் சேதுபதி, சுந்தர் சி ஆகியோருக்கு முதல் 100 கோடி படமாக அமைந்தது.
'தி கோட், அமரன், வேட்டையன், இந்தியன் 2, ராயன், மகாராஜா, அரண்மனை 4, தங்கலான், கங்குவா' ஆகிய படங்கள் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படங்கள்.
“அரண்மனை 4, கருடன், மகாராஜா, ராயன், டிமாண்டி காலனி 2, வாழை, தி கோட், லப்பர் பந்து, மெய்யழகன், பிளாக், அமரன்” ஆகிய படங்கள் இந்த ஆண்டில் லாபத்தைத் தந்த படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வந்த 'லக்கி பாஸ்கர், புஷ்பா 2', மலையாள படமான மஞ்சுமேல் பாய்ஸ் ஆகியவை தமிழிலும் லாபத்தை கொடுத்துள்ளன.
தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படங்களாக வெளிவந்த 'கல்கி 2898 ஏடி', 'புஷ்பா 2' ஆகியவை இந்தாண்டில் ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தன. குறிப்பாக புஷ்பா 2 11 நாளில் ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதித்தது.
ஹிந்தியில் வெளிவந்த 'ஸ்திரீ 2' படம் 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஹிந்திப் பட வசூலில் முதலிடத்தைப் பிடித்தது.
'இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, சூது கவ்வும் 2, விடுதலை 2' ஆகியவை இந்த ஆண்டில் வெளிவந்த இரண்டாம் பாகப் படங்கள்.
தமிழ்படம் ஆனால் ஆங்கில தலைப்பு
“மிஷன் சாப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ், ப்ளூ ஸ்டார், சிக்லெட்ஸ், ஈ மெயில், லவ்வர், சைரன், பர்த்மார்க், கிளாஸ்மேட்ஸ், கார்டியன், டெவில் ஹன்டர்ஸ், ரெபல், ஹாட் ஸ்பாட், த பாய்ஸ், டபுள் டக்கர், ஒயிட் ரோஸ், டியர், ரோமியோ, நெவர் எஸ்கேப், பைன்டர், ஸ்டார், எலக்ஷன், பி.டி.சார், ஹிட் லிஸ்ட், வெப்பன், லாந்தர், டீன்ஸ், போட், லைட் ஹவுஸ், பார்க், தி கோட், கொட்டேஷன் கேங், ஹக் மீ மோர், பிளாக், ராக்கெட் டிரைவர், சார், சீன் நம்பர் 2, பிளடி பெக்கர், பிரதர், சைலண்ட், பிளட் அன்ட் பிளாக், 2 கே லவ் ஸ்டோரி, மிய் யூ, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்,” என ஆங்கிலத் தலைப்புடன் வந்த படங்கள் அதிகமாகவே இருந்தன.
கடுமையாக விமர்சனம்
அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தைத் தந்த படங்களாக 'இந்தியன் 2, கங்குவா' படங்கள் இருந்தன. அவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
100 நாட்கள் ஓடிய படங்கள்
இந்த காலத்திலும் ராமராஜன் நடித்து வெளிவந்த 'சாமானியன்' படம், விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'மகாராஜா' படம், விஜய்யின் ‛தி கோட்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் 100 நாட்களுக்கு ஓடியது.
25 நாட்கள் ஓடிய படங்கள்
“அமரன், அந்தகன், அரண்மனை 4, அயலான், ப்ளு ஸ்டார், டிமாண்டி காலனி 2, தி கோட், லவ்வர், லப்பர் பந்து, மிஷன் சாப்டர் 1, பி.டி.சார், ராயன், சிங்கப்பூர் சலூன், சைரன், தூக்குதுரை, தங்கலான், வடக்குபட்டி ராமசாமி, வேட்டையன், ” ஆகியவை 25 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்.
சர்ச்சைகள்
புயலை கிளப்பிய 'ஹேமா கமிட்டி'
'மீ டூ' சர்ச்சை போல மலையாளத் திரையுலகத்தில் வெளிவந்த 'ஹேமா கமிட்டி'யின் அறிக்கை இந்திய சினிமா முழுக்க புயலைக் கிளப்பியது.
விமர்சனங்களால் வந்த சிக்கல்
தமிழில் 'இந்தியன் 2', 'கங்குவா' படங்களுக்கு ரசிகர்கள் வலைத்தளங்களில் வெளியிட்ட விமர்சனங்கள் பேசு பொருளானது. குறிப்பாக 'கங்குவா' படத்திற்காக தியேட்டர்களில் எடுக்கப்பட்ட ரசிகர்களின் விமர்சனங்கள் நீதிமன்ற வழக்கு வரை சென்றுள்ளது. புதிய படங்கள் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகே விமர்சனங்கள் செய்ய வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.
தனுஷ் - நயன்தாரா மோதல்
நடிகை நயன்தாராவின் திருமண வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான போது அதில் அனுமதி இல்லாமல் 'நானும் ரவுடிதான்' படக் காட்சிகளை இணைத்ததற்காக அவர் மீது படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். அதற்கு முன்னதாக தனுஷை விமர்சித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.