'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.டி.சபா (சபாபதி தட்சிணாமூர்த்தி). விஜயகாந்த் நடித்த 'பரதன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு பிரசாந்த் நடித்த 'எங்க தம்பி', லிவிங்ஸ்டன் நடித்த 'சுந்தர புருஷன்', பிரபுதேவா நடித்த 'வி.ஐ.பி', நந்தா நடித்த 'புன்னகை பூவே', ஜெய்வர்மா நடித்த 'நாம்', பிரபு நடித்த 'அ ஆ இ ஈ', மதுஷாலினி நடித்த 'பதினாறு' ஆகிய படங்களை இயக்கினார். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த 'பந்தெம்', கன்னடத்தில் 'ஜாலி பாய்' ஆகிய படங்களை இயக்கினார்.
61 வயதான சபா கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.