என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தப்படியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதையடுத்து வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தையை கடந்த சில வாரங்களாக சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் நாகவம்சி நடத்தி வந்துள்ளார்.
தற்போது இந்த படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் முதல் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்து கதைகளம் என்பதால் இப்படத்திற்கு '760 சிசி' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.