சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

'புஷ்பா 2' பட பிரிமியர் காட்சி கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்த விவகாரம், தெலங்கானா மாநில அரசியலிலும், தெலுங்குத் திரையுலகத்திலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த விவகாரத்தில் கைதாகி ஜாமினில் உள்ள படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் போலீஸ் விசரணைக்கு ஆஜரானார். இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வருடன் தெலுங்குத் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்ததாக ஏற்கெனேவ தகவல் வெளியானது.
இந்நிலையில் தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்ற தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது களமிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, படுகாயமடைந்த சிறுவன் தற்போது உடல்நலம் தேறியுள்ளதாகவும், இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு நினைவு திரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.