மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது |

'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது புதுமுகங்கள் நடிக்கும் 'ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த படத்தின் பாடல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த படத்தில் இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபாவின் குரல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலை யுகபாரதி எழுத, சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இது பற்றி மீரா கதிவரன் கூறும்போது, “இது என் கனவு படம். இது போன்ற படம்தான் என் முதல் படமாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். இதைச் சாத்தியப்படுத்த 20 வருடமாகி இருக்கிறது. தமிழ்நாட்டு இஸ்லாமியர்களின் வாழ்வோடு தொடர்புடையது நாகூர் ஹனிபாவின் பாடல்கள். இப்போது அவர் இருந்திருந்தால் அவரை பாட வைத்திருப்போம். இல்லாததால் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அவர் குரலை பயன்படுத்தி பாடலை உருவாக்கி இருக்கிறோம். இதனை முதல்வர் வெளியிட்டது எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது” என்றார்.