அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

நடிகை த்ரிஷா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட தனது 22 வருட பயணத்தில் இருக்கிறார். தற்போதும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, சில படங்களில் கதையின் நாயகியாக நடித்தபடி முதல் வரிசை நாயகியாகவே இருக்கிறார். அதேசமயம் சிலருடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, இன்னொரு பக்கம் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நிறுத்தப்பட்டு என பல சச்சையான கசப்பான அனுபவங்களை தாண்டி தான் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் த்ரிஷா. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே நடிகர் விஜய்யுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்று இணைத்து பேசப்பட்டு செய்திகள் வெளியாகி வருகின்றன.
அப்படித்தான் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்காக விஜய், திரிஷா இருவரும் ஒரே விமானத்தில் கோவா சென்று வந்தார்கள் என்கிற தகவலும் அது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமீபநாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திரிஷாவை பொறுத்தவரை இந்த விஷயங்களுக்கு நேரடியாக எதுவும் ரியாக்ஷன் காட்ட மாட்டார். ஆனால் தனது சோசியல் மீடியா பதிவுகள் மூலமாக தனது பதிலை வேறு விதமாக சொல்வார்.
அப்படி சமீபத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “மனிதர்களுக்கு உங்களை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நாய்களுக்கு உங்களை பிடிக்காமல் இருந்தால் தான் நீங்கள் கவலைப்பட வேண்டும். அப்படியானால் இதுதான் சுய பரிசோதனை செய்வதற்கான நேரம்” என்று கூறியுள்ளார்.
சமீபநாட்களாக தன் மீது சோசியல் மீடியாவில் சில மனிதர்கள் பேசும் வெறுப்பு பேச்சுகளால்தான் த்ரிஷா இப்படி ஒரு பதிவிட்டு இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிகிறது.