மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்த சேலத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு நாயுடு, தனது நண்பர் நாராயணன் அய்யங்காருடன் இணைந்து சேலம் மார்டன் தியேட்டர் நிறுவனத்திறகு இணையாக கோவையில் ஒரு ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்று உருவாக்கியதுதான் கோவை சென்டிரல் ஸ்டூடியோ. அதன் பிறகு தயாரிப்பில் இறங்கிய இருவரும் தயாரித்த முதல் படம் 'ஆர்யமாலா'.
முதல் படத்தையே பிரமாண்டமாக தயாரிக்க வேண்டும், வெற்றியும் உறுதிப்பட இருக்க வேண்டும் என்று கருதி புகழ்பெற்ற நாட்டுப்புறக்கதையான காத்தவராயன் - ஆர்யமாலா கதையை எடுத்தனர். அப்போது வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் ஆக்ஷன் ஹீரோவான பி.யூ.சின்னப்பாவை நாயகனாக ஒப்பந்தம் செய்தனர். நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமியை நடிக்க வைத்தனர். இவர்கள் தவிர என்.எஸ்.கிருஷ்ணன் இதில் நாயகனின் நண்பராக நடித்தார், அவரது மனைவி மதுரம் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்போது பிரபலமாக இருந்த பொம்மன் இரானி இயக்கினார்.
ஜி.ராமநாதனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படமும் ஹிட்டானது. அதுவரை பாகவதர் ரசிகர்களாக இருந்தவர்கள் சின்னப்பா ரசிகர்களாக மாறினர். பாகவதரிடம் அழகும் பாட்டும் மட்டுமே இருந்தது. சின்னப்பாவிடம் கூடுதலாக வீரமும், சண்டை திறனும் இருந்ததால் அவரது ரசிகர்களாக மாறினார்கள். ஆர்யமாலாவுக்கு விமர்சனம் எழுதிய அன்றைய பத்திரிகைகள் இனி சின்னப்பாதான் நம்பர் ஒண் நடிகர் என்றே குறிப்பிட்டனர்.