2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சி ஹைதராபாத்தில் நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்து போனார். அவருடைய மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இந்த விவகாரத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியில் வந்த அல்லு அர்ஜுனை தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று சந்தித்தனர். அதே சமயம், நடிகர் சிரஞ்சீவி, அவரது தம்பி நாகபாபு ஆகியோரது வீட்டிற்கு அல்லு அர்ஜுனே நேரில் சென்றார். அடுத்து அவர்களது தம்பியும், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பவன் கல்யாண் அதற்கான அப்பாயின்மென்ட்டை இன்னும் அல்லு அர்ஜுனுக்குத் தரவில்லை.
சிரஞ்சீவி தரப்பிலிருந்தும் பவன் கல்யாணிடம் பேசியுள்ளதாகத் தெரிகிறது. இருந்தாலும் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலின் போது தங்கள் கூட்டணி கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவருக்கு அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்த கோபத்தில் பவன் இன்னும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் விரைவில் பவன் கல்யாண் அப்பாயின்மென்ட் கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் அல்லு அர்ஜுன் இருக்கிறாராம்.