ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை | வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு | “இதயக்கனி”யை பறித்த இயக்குநர் வழங்கிய “வெள்ளை ரோஜா” | புது சீரியலில் கமிட்டான ஆல்யா மானசா |
தமிழ் திரையுலகின் சகாப்தங்களாக வாழ்ந்து மறைந்த எம்ஜிஆர், சிவாஜி என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சியிருந்த காலகட்டங்களில் பல ஜாம்பவான் இயக்குனர்கள் இவ்விருவரையும் வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டனர். அதேவேளையில் இவ்விருவரையும் சமகாலத்தில் இயக்கி வெற்றி பெற்ற கே சங்கர், டிஆர் ராமண்ணா போன்ற இயக்குனர்களும் இருக்கத்தான் செய்தனர்.
அந்த வரிசையில் இயக்குநர் ஏ ஜகந்நாதனும் அந்த பெருமைக்குரிய இயக்குநராக அறியப்படுபவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆரம்ப காலங்களில் எம்ஜிஆரின் “நல்லவன் வாழ்வான்”, “கொடுத்து வைத்தவள்”, “படகோட்டி”, “காவல்காரன்”, “கண்ணன் என் காதலன்”, “கணவன்”, “மாட்டுக்கார வேலன்”, “என் அண்ணன்”, “நீரும் நெருப்பும்”, “ஒரு தாய் மக்கள்”, “சங்கே முழங்கு” மற்றும் “ராமன் தேடிய சீதை” ஆகிய எம்ஜிஆரின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக ப நீலகண்டன், டி பிரகாஷ் ராவ் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களிடம் பணிபுரிந்தார். பின் 1973ம் ஆண்டு “மணிப்பயல்” என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநர் என்ற அந்தஸ்தை எட்டியவர் ஏ ஜகந்நாதன். தொடர்ந்து எம்ஜிஆரின் படங்களுக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த அனுபவம் பின்னாளில் அவரையே இயக்கும் வாய்ப்பினை எனக்குப் பெற்று, “இதயக்கனி” என்ற இமாலய வெற்றித் திரைப்படத்தை தந்தார்.
1982ல் மலையாள நடிகர் பிரேம் நஸீர் நடித்து, கருப்பு வெள்ளை திரைப்படமாக வெளிவந்த மலையாளத் திரைப்படம் “போஸ்ட் மார்டம்”. இந்த படத்தை இயக்குநர் ஏ ஜகந்நாதனுக்குப் போட்டுக் காண்பித்து, இதை தமிழில் ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படமாக எடுக்க வேண்டும் என இதன் தமிழ் உரிமையை வாங்கியவர்கள் அவரிடம் கூறினர். சிவாஜி மட்டும் படத்தில் வரும் பாதிரியார் கேரக்டரில் நடித்தால் அற்புதமாக இருக்கும். இதை பெரிய பட்ஜெட் படமாகவே எடுக்கலாம் என ஏ ஜகந்நாதன், தயாரிப்பாளர்களிடம் கூறினார். தயாரிப்பு தரப்பினரை சம்மதிக்கச் செய்துவிட்டாலும் ஜகந்நாதனுக்கு ஒரு சிறிய தயக்கம் இருக்கத்தான் செய்தது. காரணம் சிவாஜி கணேசனிடம் அதுவரை அவருக்கு நேரடி பழக்கம் ஏதும் இருந்ததேயில்லை.
அவர் எம்ஜிஆரின் படங்களில் பணிபுரிந்து, அவருடைய “இதயக்கனி” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால், தனது இயக்கத்தில் நடிக்க சிவாஜி ஒத்துக் கொள்வாரா என்ற சந்தேகம் இயக்குநர் ஏ ஜகந்நாதனுக்கு மேலோங்கி இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் நேராக சிவாஜியிடம் சென்று, அண்ணே உங்களை புக் பண்றதுக்கு முன்பே இயக்குநர் ஏ ஜகந்நாதனை படத்தின் இயக்குநராக போட்டுவிட்டோம், உங்களுக்கு இதில் ஏதும் ஆட்சேபணை உண்டா? என கேட்டனர். அதற்கு சிவாஜி மிகவும் பெருந்தன்மையோடு எங்க அண்ணனையே (எம்ஜிஆர்) இயக்கியவர் ஜகந்நாதன், அவர் இயக்கத்தில் நடிக்கிறதுல எனக்கு மகிழ்ச்சிதான் என கூறியதைக் கேட்ட இயக்குநர் ஏ ஜகந்நாதன் நெகிழ்ந்து போயிருக்கின்றார்.
அதன்பின்பு “போஸ்ட் மார்டம்” என்ற அந்த மலையாளத் திரைப்படம், தமிழில் சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடிக்க, “வெள்ளை ரோஜா” என்ற பெயரில் வண்ணத் திரைப்படமாக ரீ-மேக்காகி, 1983ஆம் ஆண்டு நவம்பர் 4 தீபாவளி திருநாளன்று வெளியாகி அபார வெற்றியைப் பெற்றது.