அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான, விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு ஓட்டலை விலைக்கு கேட்டதாகவும், இதனால் புதுச்சேரி அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் விக்னேஷ் சிவன் மீது கடும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஓட்டலை விலைக்கு கேட்கவில்லை என்றும், படப்பிடிப்புக்கு அனுமதி கேட்கவே புதுச்சேரி சென்றேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார் விக்னேஷ்சிவன்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛நான் தற்போது இயக்கி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பை புதுச்சேரி விமான நிலையத்தில் நடத்த திட்டமிட்டு அதற்கான உரிய அனுமதி பெறுவதற்காக புதுச்சேரிக்கு சென்றேன். அந்த வகையில் புதுச்சேரி முதல் அமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தேன். நான் அவர்களை சந்தித்துவிட்டு வந்த பின்பு என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவர்களை சந்தித்து சில விஷயங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த விஷயங்கள் எனக்காக கேட்கப்பட்டதாக தவறுதலாக புரிந்து கொண்டு அதனை பரப்பி விட்டார்கள்.
அரசு ஓட்டலை நான் விலை பேசியதாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இது ரசிக்கும்படியாக இருந்தாலும் இதில் எந்தவித உண்மையும் இல்லை. மேலும் இது போன்ற மீம்ஸ்கள் தேவையில்லாதது என்று நினைக்கிறேன். எனவேதான் இந்த விவகாரத்தில் எனது விளக்கத்தை தெரிவிக்கிறேன்''.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.