கூண்டோடு விலகிய நடிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து மெகா நிகழ்ச்சி நடத்தும் சுரேஷ் கோபி | ‛குட் பேட் அக்லி' படப்பிடிப்பை முடித்த அஜித் : ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக் : நடிகர் திலகத்தின் உயர்வான நடிப்பிற்கு உரமிட்ட “உயர்ந்த மனிதன்” | ‛சிவகார்த்திகேயன் 25' படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா | ஜெயம் ரவிக்கு வில்லன் பிரபல இயக்குனரின் மகன் : நாயகி தவ்தி ஜிவால் | தனுஷ், துல்கர் சல்மான் பட இயக்குனருடன் சூர்யா கூட்டணி? | ஹேப்பி பொண்ணு நான் : ஆனந்தத்தில் அகல்யா | ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜனனி | தீபக் அப்படிப்பட்டவர் இல்லை - நக்ஷத்திரா சப்போர்ட் | வெண்ணிற ஆடை, அவ்வை சண்முகி, சிங்கம் : ஞாயிறு திரைப்படங்கள் |
80,90 காலகட்டத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் பி. வாசு. இவரின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பெரிதளவில் அவர் கதாநாயகனாக வெற்றி பெறவில்லை.
அதன்பிறகு சிவலிங்கா, ஏழு நாட்கள் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் 34வது படத்தில் சக்தி நடிக்கிறார். படத்தில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.