வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
‛ஜெயிலர், வேட்டையன்' படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும், ‛கூலி' திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இதுவரை தோல்வி படங்களே கொடுக்காத லோகேஷ் உடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பதால் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர், உபேந்திர ராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கூலி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று (டிச.,12) ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, ‛சிக்கிட்டு வைப்' என்ற பாடல் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினியின் நடனத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதற்கிடையே ஜெய்ப்பூரில் கூலி படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் அங்கு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழு உடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் ரஜினி.