நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மலையாள இயக்குனருடன் இணையும் சூர்யா | நான் பத்தாம் வகுப்பு பெயில் - கத்ரீனா கைப் | சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'புஷ்பா 2'. தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
தமிழகத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2021ல் வெளிவந்த 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் அப்போது 25 கோடி வசூலைப் பெற்றது. அதுவே அப்போது லாபகரமான படமாக அமைந்தது. ஆனால், இப்போது வெளியாகி உள்ள இரண்டாவது பாகத்தின் வசூல் அதைவிட இரண்டு மடங்கு வசூலித்துள்ளது.
இருந்தாலும் 'பாகுபலி 2' படத்தின் வசூலான 100 கோடிக்கும் அதிகமான வசூலை 'புஷ்பா 2' பெறுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.