ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

கன்னட சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்த மோகன், பாலுமகேந்திராவின் முதல் படமான 'கோகிலா'வில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். முதல் ஹீரோ கமல்ஹாசன். பிறகு 'மூடுபனி' படத்தின் மூலம் பாலுமகேந்திராவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதில் பிரதாப் ஹீரோ, மோகன் இரண்டாவது ஹீரோ. அதன் பிறகு மகேந்திரன் இயக்கிய 'நெஞ்சத்தை கிள்ளாதே'வில் மோகன்தான் கதையின் நாயகன். ஆனால் டைட்டில் கார்டில் பிரதாப், சரத்பாபுவுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் மோகன் பெயர் இடம் பெற்றது.
முதன் முறையாக முழு திரையில் மோகன் என தனித்து பெயர் வெளியிடப்பட்டது 'கிளிஞ்சல்கள்' படத்தில்தான். இதற்கு முன்பு மோகன் நடித்த படங்கள் வெற்றிப் படங்கள் என்றாலும் கிளிஞ்சல்கள்தான் முதல் வெள்ளி விழா படம். மோகன் ஜோடியாக பூர்ணிமா நடித்தார். இவர்களுடன் திலீப், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். துரை இயக்கினார்.
இந்து இளைஞனுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையிலான காதலை பேசிய படம். 'காதலர்கள் தோற்கலாம். காதல் தோற்பதில்லை' என்ற படம். முதன் முதலாக டி.ராஜேந்தர் இசை அமைத்த வெளியான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. கிளிஞ்சல்கள் இப்போதும் காதலர்களின் பேவரேட் படமாக இருக்கிறது.