'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவன் விஷ்ணு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10வது சீசனில் முதல்கட்ட ஆடிஷனில் தேர்வாகி மேடையேறும் வாய்ப்பை பெற்றிருந்தார். நிகழ்ச்சியின் முதல்நாளில் 'அத்தை மக உன்ன நினைச்சு அழகு கவித எழுதி வச்சேன்' பாடலை சிறுவன் விஷ்ணு பாடியதை கேட்டு நடுவர்களாக இருந்த பாடகர்கள் மனோ, சித்ரா, இசையமைப்பாளர் டி. இமான் உள்ளிட்டோர் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், தன்னுடைய குருக்களையாப்பட்டி கிராமத்தில் குடிதண்ணீருக்கே வழியில்லை என்பதை குறிப்பிட்டு பேசியிருந்தார். இது பலரையும் வருத்தப்பட செய்திருந்தது. சிறுவனின் இந்த கவலையை கோரிக்கையாக ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவனின் கிராமத்திற்கு உதவ முடிவு செய்தார். அதன்படி, உடனடியாக அந்த கிராம பஞ்சாயத்து மற்றும் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் அனுமதி பெற்று ஆழ்குழாய் தோண்டி, அந்த கிராம மக்களுக்கு குடிதண்ணீர் வசதிக்கு வழிவகுத்துள்ளார்.
கிராமத்து மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடிதண்ணீர் எடுத்து வந்த நிலையில் லாரன்சின் இந்த உதவியால் கிராமத்திற்கே தண்ணீர் வசதி கிடைத்துள்ளது. சிறுவனின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய லாரன்ஸ்க்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான தருணங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 14, 15 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ராகவா லாரன்ஸ் பங்குபெறும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.