காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
இந்தியத் திரையுலகத்தின் வசூல் வரலாற்றை 'பாகுபலி 2'க்கு முன், பின் எனப் பிரிக்கலாம். அதற்கு முன்பு வரை படம் வெளியான முதல் நாளில் 100 கோடி வசூலைக் குவிக்கும் விதமாக எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால், அந்தப் படம்தான் முதன் முதலில், வெளியான முதல் நாளிலேயே 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தியத் திரையுலகத்தையே வியக்க வைத்தது.
ஆனால், அதையும் விட அதிகமாக கடந்த வாரம் வெளியான 'புஷ்பா 2' படம் முதல் நாளில் ரூ.294 கோடி வசூலித்து புதிய சாதனையைப் படைத்தது. இப்படி முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா ?. இதோ பட்டியல்…
1. புஷ்பா - ரூ.294 கோடி
2. ஆர்ஆர்ஆர் - ரூ.223 கோடி
3. பாகுபலி 2 - ரூ.210 கோடி
4. கல்கி 2898 ஏடி - ரூ.191 கோடி
5. சலார் - ரூ.178 கோடி
6. தேவரா - ரூ.172 கோடி
7. கேஜிஎப் 2 - ரூ.160 கோடி
8. லியோ - ரூ.148 கோடி
9. ஆதிபுருஷ் - ரூ.140 கோடி
10. சாஹோ - ரூ.130 கோடி
இதில் முதல் 6 இடங்களில் தெலுங்குப் படங்கள்தான் உள்ளன. 7வது இடத்தில் கன்னடப் படமும், 8வது இடத்தில் தமிழ்ப்படமும், 9வது, 10வது இடங்களில் மீண்டும் தெலுங்குப் படங்களும் இடம் பிடித்துள்ளன. இவற்றில் பிரபாஸ் படங்கள் மட்டுமே 5 உள்ளன.