ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடி விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா. சென்னையில் நடந்த 'புஷ்பா 2' பட விழாவில் தன்னுடைய காதல் பற்றி பேசுகையில், ஊருக்கெல்லாம் தெரிந்த விஷயம்தானே என்று கூறியிருந்தார் ராஷ்மிகா.
ராஷ்மிகா கதாநாயகியாக நடித்த 'புஷ்பா 2' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. அப்படத்தைத் தனது காதலர் விஜய் தேவரகொன்டா குடும்பத்துடன் ஹைதராபாத்தில் பார்த்து ரசித்தார் ராஷ்மிகா. விஜய் தேவரகொன்டாவின் அம்மா மாதவி, சகோதரர் நடிகர் ஆனந்த் ஆகியோர் படத்தைப் பார்த்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
முக்கியமான நாட்களில் விஜய் தேவரகொன்டா குடும்பத்தாருடன் ராஷ்மிகா தங்குவது வழக்கம். தீபாவளி பண்டிகையைக் கூட அவர்களுடன்தான் கொண்டாடினார். தற்போது தனது புதிய பட வெளியீட்டையும் அவர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.