45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் |
கங்குவா படத்திற்கு பிறகு கார்த்தி சுப்பராஜ் இயக்கி உள்ள தனது 44வது படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் 'ஆறு' படத்தில் பிறகு மீண்டும் திரிஷா அவருக்கு ஜோடியாகி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஏற்கனவே, எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்களில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்த சூர்யா, மீண்டும் இந்த 45வது படத்திலும் அதே வேடத்தில் நடித்து வருகிறார். இதே வேடத்தில் அவர் நடித்த ஜெய் பீம் படம் அவருக்கு பெரிய வெற்றியாக அமைந்ததால் அந்த செண்டிமெண்ட் இந்த நாற்பத்தி ஐந்தாவது படத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.