சிரஞ்சீவி படத்தை தயாரிக்கும் நானி | 'லவ் டுடே' பாணியில் உருவாகும் 'ரிங் ரிங்' | ''மனைவியின் பேச்சை கேளுங்க'': கணவன்மார்களுக்கு அட்வைஸ் செய்த அபிஷேக் பச்சன் | விமல் ஜோடியாக மீண்டும் நடிக்கும் சாயாதேவி | நடிப்புக்கு முழுக்கா?: நடிகர் விக்ராந்த் மாஸே திடீர் 'பல்டி' | 'மழையில் நனைகிறேன்' விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படம் : இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக் : இயக்குனராக மேஜர் சுந்தர்ராஜன் | பிளாஷ்பேக்: இந்தியாவின் முதல் அந்தாலஜி படம் | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த “நாடோடி மன்னன்” உருவான பின்னணி |
வெள்ளை ஆடை, கைகட்டி நிற்கும் பணிவு, அதிர்ந்து பேசாத குரல் இதுதான் ஏவிஎம்.சரவணன். 100 படங்களுக்கு மேல் தயாரித்தும் எந்த ஆர்ப்பாட்டமோ, அகங்காரமோ இல்லாத அமைதி கடல். ஏவி.மெய்யப்ப செய்டியார் மறைந்தபோது இத்தனை பெரிய நிறுவனத்தை யார் கட்டி காப்பது என்ற கேள்வி எழுந்தபோது கம்பீரமாக அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்.
அன்றைக்கு ஏவிம்மை விட்டு விலகி இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆரை நிறுவனத்திற்குள் கொண்டு வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அர்ஜுன், கே.பாக்யராஜ் என அடுத்த தலைமுறை ஹீரோக்களையும் கொண்டு வந்தவர். ஓப்பனிங் சாங், ஹீரோ என்ட்ரி, இன்டர்வல் பிளாக், மூணு ரீலுக்கு ஒரு பாடல், ஒரு சண்டை, பரபரப்பான கிளைமாக்ஸ் என கமர்சியல் சினிமாவை வடிவமைத்தவர்.
ஏவிஎம் நிறுவனத்தை காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவர். அன்றைய தேதியில் பெரிய பட்ஜெட் படமாக 'சிவாஜி'யை உருவாக்கினார். ரஜினி, ஷங்கர் என்ற இரு பெரும் ஜாம்பவான்களை இணைத்து சாதனை படைத்தார். தற்போது சினிமா தயாரிக்கவில்லை என்றாலும் ஏவிஎம் நிறுவனத்தின் சில பகுதிகளை அவரது சகோதரர்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தினாலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை இப்போதும் சினிமாவிற்காக கொடுத்து வருகிறவர். ஓடிடி வெப் தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆல்பங்கள் என காலத்துக்கேற்ற மாற்றத்தை கொண்டு வந்தவர்.
இன்று அவருக்கு 84வது பிறந்த நாள். சற்று உடல்நலக்குறைவுடன் இருக்கும் அவர் மீண்டும் ஏவிஎம் வளாகத்திற்குள் ராஜநடை போட வாழ்த்துவோம்.