'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் திருடி, வீரமும் ஈரமும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தன்யா. மலையாளத்தில் தன்யா மேரி வர்கீஸ் என்ற பெயரில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஜான் ஜேக்கப் என்பரை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
கணவர் ஜான் ஜேக்கப்பும், தன்யாவும் இணைந்து கட்டுமான நிறுவனம், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இவர்களின் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் கூறப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாகவும், கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி பலரை ஏமாற்றி 100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக கேரள போலீஸ், நடிகை தன்யா அவரது கணவர் ஜான் ஜேக்கப் மற்றும் அவரது நண்பர்கள் சிலரை செய்ததுது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆனார்கள். வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் அவர்கள் மீது அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது. நடிகை தன்யாவுககு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள ரூ.1.56 கோடி மதிப்புள்ள சொத்து உள்பட அவர் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.