ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கு, தமிழில் நடித்து வரும் நடிகர் நாகார்ஜுனா. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவைக் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா. சமந்தாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பின் சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தவனர். அடுத்து நடிகை சோபிதா துலிபலாவை டிசம்பர் 4ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார் நாக சைதன்யா.
இதனிடையே, நாகார்ஜுனா - அமலா தம்பதியினரின் ஒரே மகனான நடிகர் அகில் திருமணத்தை சற்று முன் அறிவித்துள்ளார் நாகார்ஜுனா.
“எங்கள் மகன் அகில் நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது மருமகளாக வரப் போகிறவர் ஜைனாப் ரவ்ட்ஜி.
ஜைனாபை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த இளம் தம்பதியரை வாழ்த்த எங்களுடன் இணையுங்கள். மேலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் உங்களது எண்ணற்ற ஆசீர்வாதத்துடன் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.