காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் காரணமாக பல முக்கிய ஊர்களுக்கு சென்று படக்குழு புரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இந்த புஷ்பா-2 படத்தின் புரமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ஒரு முறை நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்து கதை சொல்ல சென்றேன். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் அவரிடத்தில் எப்படி கதை சொல்லப் போகிறேன் என்று தடுமாறினேன். ஆனால் அவரோ, மிக அழகாக தமிழ் பேசினார். அப்போதுதான் இவர் நேரடியாக தமிழ் படத்திலேயே நடிக்கலாம் என்று தோன்றியது.
அதேபோல் பாட்னாவில் அவருக்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடியது. அதனால் இனி வரும் காலங்களில் தெலுங்கில் நடிப்பது போன்று தமிழ், ஹிந்தியிலும் அவர் நேரடி படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று அல்லு அர்ஜுன் இடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார் நெல்சன். அதைக் கேட்ட அவர் அதைத்தான் ஏற்றுக் கொள்வது போன்று தலை அசைத்தார்.
அதையடுத்து, அல்லு அர்ஜுனை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்? என்று நெல்சனிடத்தில் தொகுப்பாளர்கள் கேட்டபோது, இதற்கு பதில் அல்லு அர்ஜுன் சார்தான் சொல்லணும் என்று நெல்சன் சொல்ல, அதைக்கேட்ட அல்லு அர்ஜுனோ, நான் ஓகே என்பது போன்று கட்டை விரலை காண்பித்து அவர் இயக்கத்தில் நடிக்க சம்மதம் சொன்னார்.




