2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மாமன்னன் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருந்த ரகு தாத்தா படம் தோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார். வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை காளீஸ் என்பவர் இயக்கி இருக்கிறார். இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். தமிழ் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் இந்த படம் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷை கவர்ச்சியான கெட்டப்புக்கு மாற்றியுள்ளார்கள். இப்படத்தின் நைனா மட்டக்கா என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான தோற்றத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் திரைக்கு வருகிறது.