வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் |
நடிகை நயன்தாரா தன்னுடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடி வந்தார். ஆனால் இந்த ஆண்டு எளிய முறையில் அவர் கொண்டாடியிருக்கிறார். அதாவது இந்த ஆண்டு நயன்தாராவின் 40வது பிறந்தநாளில் அவரது ஆவணப்படம் வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உருவாக காரணமாக இருந்த நானும் ரவுடிதான் படத்தின் முக்கிய காட்சிகளை அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தருவதற்கு மறுத்ததால் தனுசை விமர்சனம் செய்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் நயன்தாரா. அதையடுத்து தனது பிறந்தநாளை கொண்டாட கணவர் மற்றும் மகன்களுடன் அவர் டில்லி சென்றிருந்தார். அப்போது டில்லியில் அதிக அளவில் மக்கள் கூட்டம் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் அவர்கள் உணவு சாப்பிட்டுள்ளார்கள். அது குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் விக்னேஷ் சிவன், கடந்த சில ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் நயன்தாராவின் பிறந்தநாளை சிறிய அளவில் கொண்டாடினோம் என்று குறிப்பிட்டுள்ளார்.