'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் வெளியான பதான், ஜவான் படங்கள் தொடர்ச்சியாக ரூ.1000 கோடி வசூலை கடந்து சாதித்தன. ஆரம்பகாலத்தில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளார் ஷாரூக். இந்நிலையில் துபாய் நடந்த நிகழ்ச்சியில் தனது தோல்விகள் பற்றி அவர் பேசியதாவது : ‛‛தோல்விகளுக்காக ஒரு நாளும் அழக்கூடாது. அதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்ட தோல்விகளை நினைக்கையில் வெறுப்பாக உள்ளது. நான் பாத்ரூமில் அழுதிருக்கிறேன். அதை யாரிடமும் வெளிகாட்டியதில்லை.
இந்த உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என நம்ப வேண்டும். விரக்தி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வர கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மட்டுமே தவறு நடக்கிறது என நம்பக்கூடாது. வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கும். அது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். அதற்காக வாழ்க்கையை குறை கூற கூடாது'' என்றார்.