சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

நடிகை நயன்தாரா பற்றிய டாகுமென்டரியான 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்குக் கொடுத்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அது எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. கடந்த மாதம்தான் அது பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி இன்று நவம்பர் 18ம் தேதி வெளியாகி உள்ளது. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த டாகுமென்டரியின் டிரைலரில் 'நானும் ரௌடிதான்' படத்தின் 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி சேர்த்ததற்காக அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து நடிகை நயன்தாராவிற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நயன்தாரா. இந்த விவகாரம் திரையுலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரைலரில் இடம் பெற்ற 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளுக்கே 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இன்று வெளியான டாகுமென்டரியில் சுமார் 10 வினாடி 'நானும் ரௌடிதான்' படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 3 வினாடிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், இந்த 10 வினாடி காட்சிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.