ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
'7 மைல்ஸ் பெர் செகண்ட்' நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் படம் 'மிஸ் யூ'. மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்கி உள்ளார். சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
படம் பற்றி இயக்குனர் ராஜசேகர் கூறியதாவது: 'லவ் யூ' வை விட 'மிஸ் யூ' என்கிற வார்த்தையில் தான் ரொம்பவே லவ் இருக்கிறதால்தான் அந்த டைட்டிலை வைத்துள்ளோம். யாருமே தங்களுக்கு பிடித்த பெண்ணைத்தான் லவ் பண்ணுவார்கள். இதில் நாயகன் தனக்கு பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார். இந்த ஒரு லைன் தான் சித்தார்த்தை இம்ப்ரஸ் பண்ணி இந்த படத்திற்குள் அழைத்து வந்தது.
எப்படி பிடிக்காத பெண்ணை ஒருவன் லவ் பண்ணுகிறான், அவளுக்கு அது தெரிந்திருந்தும் எப்படி கன்வின்ஸ் பண்ணுகிறான் என்பதற்கு பொருத்தமான காரணத்துடன் தான் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது. என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் இந்த கதையை உருவாக்கியுள்ளேன். நிச்சயம் இந்த படத்தின் கதை தனித்தன்மையுடன் இருக்கும்.
இதில் மொத்தம் எட்டு பாடல்கள். ஆறு முழு நீள பாடல்கள். அதில் இரண்டு பாடல்களை சித்தார்த் பாடியுள்ளார். சித்தார்த் பாடிய “நீ என்ன பார்த்தியா..” மற்றும் “சொன்னாரு நைனா” பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. என்றார்.