'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் இளம் ஹீரோவாக அறிமுகமான சிரஞ்சீவி 3 ஆண்டுகளுக்குள் 25 படங்களில் நடித்து முடித்தார். இந்த நிலையில்தான் அவர் தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய '47 நாட்கள்' படத்தில் வில்லனாக நடித்தார். சென்னையில் படித்து, வளர்ந்த சிரஞ்சீவி தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்த காலத்தில் கே.பாலச்சந்தர் படம் என்றதும் கதை கேட்காமலேயே நடித்தார். முதலில் வில்லன் என்பதால் நடிக்கத் தயங்கினார். ஆனால் பாலச்சந்தர் இது வில்லன் கேரக்டர் இல்லை நெகட்டிவ் ஹீரோ என்று அவருக்கு புரிய வைத்து நடிக்க வைத்தார்.
எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய '47 நாட்கள்' என்ற நாவலையே பாலச்சந்தர் படமாக்கினார். பிரான்ஸில் வசிக்கும் சிரஞ்சீவி தமிழ்நாட்டை சேர்ந்த கிராமத்து பெண்ணான ஜெயப்பிரதாவை அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்.
தமிழ் தவிர வேறு எந்த மொழியும் அறிந்திடாதவராக இருக்கும் ஜெயப்பிரதாவை பிரான்ஸுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சிரஞ்சீவி ஏற்கனவே திருமணமானவர் என ஜெயப்பிரதா தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார்.
இதனால் கோபமடையும் சிரஞ்சீவி, ஜெயப்பிரதாவை கொடுமைப்படுத்துகிறார். சொத்துக்காக முதல் மனைவி, ஆசைக்காக இரண்டாவது மனைவி என இருக்கும் சிரஞ்சீவியிடமிருந்து தமிழ் மட்டும் தெரிந்த ஜெயப்பிரதா பிரான்ஸில் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை சொல்லும் படம்.
சிரஞ்சீவியின் பிரான்ஸ் மனைவியாக பிரான்ஸ் நடிகை அன்னே பிராட்ரிசியா நடித்திருந்தார். ஜெயபிரதாவுக்கு உதவும் மனிதாபிமானமிக்க இந்தியராக சரத்பாபு நடித்திருந்தார். பெரும்பகுதி படப்பிடிப்பு பிரான்சில் நடந்தது. சிரஞ்சீவி தற்போது 150 படங்களை தாண்டி இருந்தாலும் '47 நாட்கள்' அவருக்கு முக்கியமான படம்.