தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

ஓடிடி உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல் தொடரான 'ப்ரீடம் அட் மிட்நைட்' என்ற தொடர் இன்று முதல் சோனி லிவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நடந்த அரசியல் மாற்றங்கள், நாடு பிரிவினைகள், தலைவர்களின் மோதல்கள், கலவரங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகி உள்ளது.
அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங் தாஸ், குந்தீப் கவுர், திவ்யா நிதி ஷர்மா, ரேவந்தா சாராபாய் மற்றும் ஈதன் டெய்லர் ஆகியோர் இந்த கதையை எழுதியிருக்கின்றனர். லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபியரின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் ஜவஹர்லால் நேருவாக சித்தாந்த் குப்தா, மகாத்மா காந்தியாக சிராக் வோஹ்ரா, சர்தார் வல்லபாய் பட்டேலாக ராஜேந்திர சாவ்லா, முகமது அலி ஜின்னாவாக ஆரிஃப் ஜகாரியா, பாத்திமா ஜின்னாவாக இரா துபே, சரோஜினி நாயுடுவாக மலிஷ்கா மென்டோன்சா, லிகாட் அலிகானாக ராஜேஷ் குமார், கே.சி.சங்கர் வி.பி. மேனன் கதாபாத்திரத்தில், லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டனாக லூக் மெக்கிப்னி, லேடி எட்வினா மவுண்ட்பேட்டனாக கோர்டெலியா புகேஜா, ஆர்க்கிபால்ட் வேவலாக அலிஸ்டர் பின்லே, கிளெமென்ட் அட்லியாக ஆண்ட்ரூ கல்லம், சிரில் ராட்கிளிப் ஆக ரிச்சர்ட் டெவர்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.