குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், "எனை சுடும் பனி" படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார். இவர்களுடன் பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோர் நடிக்கிறார்கள். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அருள்தேவ் இசை அமைக்கிறார்.
பொள்ளாச்சி பகுதியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து அதன் பின்னணியில் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த வரிசையில் தற்போது வந்திருக்கும் படம் இது. இந்த படத்தை ராம் ஷேவா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
கதாநாயகன் ஜாலியாக இருக்கும் இளைஞன். ஐபிஎஸ் அதிகாரி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. ஒரு பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப் படுகிறது. அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் நீதி கேட்டு போராடுகிறார்கள். போலீஸ் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறது.
எதிர்பாராத விதமாக விசாரணை வளைக்குள் கதாநாயகன், கதாநாயகி இருவரும் சிக்குகிறார்கள். விசாரணை தொடங்குகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. சைக்கோ கிரைம் திரில்லர் ஜார்னரில் படம் தயாராகியுள்ளது. என்றார்.