முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் |

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள 'கங்குவா' படம் நாளை மறுதினம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 2000 கோடியை நிச்சயம் வசூலிக்கும் என படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கெனவே அறிவித்திருந்தார். அவ்வளவு கோடி வசூலிக்க வேண்டும் என்றால் அதற்குரிய தியேட்டர்களில் படம் வெளியாக வேண்டும்.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் கூட தியேட்டர்கள் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதனால், ஆன்லைன் முன்பதிவும் முழு வீச்சில் ஆரம்பமாகவில்லை. சென்னையைப் பெறுத்தவரையில் 8 தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.
படத்திற்கான தியேட்டர்கள் ஒப்பந்தத்தில் வினியோகஸ்தர் தரப்பில் கேட்கப்படும் சதவீதத் தொகையைத் தர தியேட்டர்காரர்கள் சம்மதிக்கவில்லை என்று தகவல். அதனால், ஒப்பந்தம் போடுவதில் இழுபறி நீடித்து வருகிறதாம். ஏற்கெனவே சொன்னபடி பல தியேட்டர்களில் 'அமரன்' படத்தைத் தொடரவே விரும்புகிறார்களாம். முக்கியமான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம்.
கடந்த வாரத்திலேயே முடித்திருக்க வேண்டிய ஒப்பந்த வேலைகளை இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறார்களே என திரையுலகிலேயே சிலர் ஆச்சரியப்படுவதாகத் தகவல்.