கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மனைவி மகேஸ்வரி. 66 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரை கவனித்துக் கொள்வதற்கென்றே தனி பணியாளர்களை சத்யராஜ் நியமித்துள்ளார். இது திரைத்துறையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரியும். என்றாலும் இதனை சத்யராஜ் குடும்பம் வெளிப்படையாக அறிவிக்காததால் யாரும் இதுபற்றி வெளியில் பேசவில்லை.
இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா இந்த தகவலை தற்போது பொது வெளியில் அறிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளாக என் அம்மா (மகேஸ்வரி) கோமாவில் இருந்து வருகிறார். அவரை எங்கள் வீட்டில் வைத்து நன்கு கவனித்து வருகிறோம். அவருக்கான உணவை டியூப் வழியாக செலுத்தி வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். எனினும் அதிக நம்பிக்கையுடனும், நேர்மறையான எண்ணத்துடனும், மருத்துவ சிகிச்சையால் என் அம்மா குணமடைவார் என்று காத்திருக்கிறோம்.
என் அம்மா பழைய மாதிரி திரும்பவும் கிடைப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அம்மா கோமாவில் இருப்பதால், அப்பா தனியாளாக குடும்பத்தை சமாளித்து வருகிறார். அவர்தான் எனக்கு தாய்க்கு தாயாக இருக்கிறார். அதுபோல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் தாய் (நாதாம்பாள்), அதாவது எனது பாட்டியும் தவறிவிட்டார். இதனால், நானும் அப்பாவுக்கு தாய் போல் மாறிவிட்டேன். நானும், அப்பாவும் சக்திவாய்ந்த தாய்களாக மாறி, ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்திக் கொள்கிறோம். என்று எழுதியுள்ளார்.