அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் |
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் ஏ.பீம்சிங். அவரது தமிழ்ப் பண்பாடு கலந்த கதையும், குடும்பப் பாங்கான கதையோட்டமும், நேர்த்தியான இயக்கம் மூலம் இன்று வரைக்கும் தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக இருப்பவர் பீம்சிங். சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கியவர், விஸ்வநாதன் - ராமமூர்த்தியைத் தமிழ்த் திரையுலகிற்கு கொண்டு வந்தவர். 'ப' வரிசைப்படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர். கமல்ஹாசன் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர்.
இது அவரின் நூற்றாண்டு. இதனை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், சினிமா பேக்டரி அமைப்பும் இணைந்து நடத்தியது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிவகுமார், தலைமை தாங்கினார். கே.பாக்யராஜ் முன்னிலை வகித்தார். நடிகர் விக்ரம்பிரபு, இயக்குநர் பீம்சிங்கின் உருவப் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேவதாஸ், வி.சி.குகநாதன், அபிராமி ராமநாதன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், காரைக்குடி நாராயணன், சித்ரா லட்சுமணன், ராதாரவி, எடிட்டர் லெனின், இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், பொதுச்செயலாளர் பேரரசு, சினிமா பேக்டரி நிறுவனர் ராஜேஷ். பீம்சிங் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சிவகுமார் பேசும்போது “பீம்சிங் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி அவரது குடும்பம். நான் எதிர்பார்க்கவில்லை பீம்சிங்குக்கு இவ்வளவு சீடர்கள் இருப்பார்கள் என்று. பாசமலர் படம் பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் பாதபூஜை படத்தில் பயணித்தேன். பொறுமையான மனிதர். இவரைப் போன்ற சிரஞ்சீவியான ஆட்கள் நாம் போனாலும் இன்னும் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்கள்” என்றார்.